×

ஹீரோவுக்கு முத்தம் தர மறுத்த நடிகை

சினிமாவிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் சமீரா ரெட்டி. ஓரிரு மாதங்கள் முன் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். நடிப்பிலிருந்து தூரம் சென்றாலும், தனது சினிமா அனுபவங்களை அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் சமீரா. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இந்தி படங்களில் நடித்துவிட்டு, தென்னிந்திய சினிமாவுக்கு வந்தேன். இங்கு ஒரு படத்தில் ஹீரோவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க சொல்லி நிர்பந்தம் செய்தார்கள். நான் அதிர்ச்சி அடைந்தேன். 

காரணம், அப்படியொரு காட்சி படத்தில் இருப்பதாக கதை சொல்லும்போது கூறவில்லை. படப்பிடிப்புக்கு வரும்போதும் தெரிவிக்கவில்லை. சில காட்சிகளை படமாக்கிவிட்டு, திடீரென வந்து இந்த காட்சியில் நடிக்கும்படி நிர்பந்தம் செய்தார்கள். நான் முடியாது என சொன்னபோது, இந்தியில் முஸாபிர் படத்தில் இதுபோல் நடித்தீர்களே என ஏளனமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த காட்சியை பற்றி முன்கூட்டியே சொல்லி இருந்தனர். கதைக்கு தேவையாக இருந்ததால் நானும் அதுபோல் நடித்தேன். அதற்காக சம்பந்தமே இல்லாமல் இப்போது அதுபோல் காட்சியை படமாக்குவீர்களா என கேட்டு சண்டை போட்டேன். அந்த முத்தக் காட்சியில் நடிக்கவும் மறுத்தேன்’ என தெரிவித்துள்ளார் சமீரா.

Tags : actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...