காதலனுடன் பிரியா சண்டை

பிரியா பவானிசங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். ராஜவேல், வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர், தனது காதலரை பிரிந்துவிட்டார் என தகவல் பரவியது. இதை பிரியா மறுத்தார். காதலர் ராஜவேல், சென்னை வந்துள்ளார். தற்போது பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலருடன் மோதுவது போன்ற ஒரு பதிவை பதிவு செய்து உள்ளார்.

அவர் இது குறித்து கூறும்போது, ‘நாம் ஒரு நபர் மீது கோபமாக இருந்தாலும், அவரோடு நாம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். புகைப்படம் எடுத்தால் நமது கோபத்தை சற்று தணிக்கும் என்று நினைத்து, அவர் நம்மை போட்டோ எடுப்பார். இருந்தாலும் நான் வெடிக்க தயாராக இருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். பிரியா இப்படி கோபமாக கூறி இருந்தாலும் இது காதலர்களிடையே ஏற்படும் செல்ல சண்டைதான் என பிரியாவுக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

Related Stories: