×

கொடுத்தா ரூ.1,500, கொடுக்கலைன்னா ரூ.3000 மணமேடையில் ‘முத்த பந்தயம்’அத்துமீறிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த ‘முத்த பந்தயத்தால் திருமணமே நின்று போனது. உத்தரபிரதேச  மாநிலம், சம்பல் அடுத்த பவாச கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று சில நாட்களுக்கு முன் நடந்தது. மணமக்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தனர். சுமார் 300க்கும்  மேற்பட்ட விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர். அப்போது  திடீரென மணமகன், மணமகளை முத்தமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள், விழா  மேடையை விட்டு வெளியேறி தனது அறைக்கு சென்றார். உறவினர்கள் அவரை  சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. மீண்டும்  வரவேற்பு விழா மேடைக்கு செல்ல மறுத்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்று  புகார் அளித்தார். அந்த புகாரில், ‘இனி அவருடன் (மணமகன்) வாழ  விரும்பவில்லை; இனிமேல் எனது தந்தையின் வீட்டிலேயே இருப்பேன்; அவருடன்  செல்ல மாட்டேன். நூற்றுக்கணக்கானோருக்கு முன்பாக, என்னை முத்தமிட்டதை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுபோன்ற செயலை செய்த அவர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால் மணமகன் தரப்பில், ‘மேடையில்  முத்தம் கொடுப்பது தொடர்பாக மணமகளிடம் பந்தயம் கட்டினேன். அதன்படி, அனைவரது முன்பாக முத்தமிட்டால் (மணமகளை) ரூ.1,500  தருவதாக கூறினேன். அவ்வாறு செய்யா விட்டால் ரூ.3,000 தருகிறேன் என்று  கூறினேன்’ என்று கூறினார். ஆனால், அந்த மணப்பெண்ணிடம் போலீசார் மீண்டும்  விசாரித்த போது, தான் அவ்வாறு பந்தயம் ஏதும் கட்டவில்லை என்று கூறினார். போலீசார் எவ்வளவோ சமதானம் செய்ய முயன்றும் அவர் ஏற்றுக்கொள்ளாமல், மணமகனுடன் வாழ விரும்பவில்லை என கூறிவிட்டு சென்றார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது….

The post கொடுத்தா ரூ.1,500, கொடுக்கலைன்னா ரூ.3000 மணமேடையில் ‘முத்த பந்தயம்’அத்துமீறிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,Sambal ,Groom ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு