×

திருமண பிரச்னைகள், ஜாமீன் மனுக்களை விசாரிக்க அனைத்து மகளிர் அமர்வு; உச்ச நீதிமன்றத்தில் அமைப்பு

புதுடெல்லி:  திருமண பிரச்னைகள்  மற்றும் ஜாமீன் தொடர்பான  மனுக்களை விசாரிப்பதற்காக நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அனைத்து மகளிர் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மகளிர் அமர்வு ஒன்றை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைத்துள்ளார். இந்த அமர்வில் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, பெலா எம்.திரிவேதி ஆகிய 2 பெண் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். திருமண பிரச்னைகள் தொடர்பாக ேவறு நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றக் கோரும் மனுக்கள் மற்றும் ஜாமீன் மனுக்கள் இந்த அமர்வால் விசாரிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்று மகளிர் அமர்வு உருவாக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்….

The post திருமண பிரச்னைகள், ஜாமீன் மனுக்களை விசாரிக்க அனைத்து மகளிர் அமர்வு; உச்ச நீதிமன்றத்தில் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Hima Kohli ,Bela M Trivedi ,
× RELATED தபால் ஓட்டு கேட்டு 78 வயது மூதாட்டி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு