×

புதிய படங்களை திரையிட தியேளுக்கு தயாரிப்ட்டர்கபாளர்கள் நிபந்தனை

கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்போது புதிய படங்களை திரையிட தயாரிப்பாளர்கள், தியேட்டர்களுக்கு 6 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா உள்ளிட்ட 50 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தயாரிப்பாளர்களாகிய நாங்கள் இதுவரை சிறிய தொகை முதல் 70 கோடி வரையில் ஷேர் வரும் பெரிய படங்கள் வரை தயாரித்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இனிவரும் காலத்தில் இதேபோன்று படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே படம் எடுத்துக் கொண்டும், எடுக்கவும் இருக்கிற தயாரிப்பாளர்கள் இணைந்து சில விஷயங்களை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அது வருமாறு: கடந்த 10 வருடங்களாக தியேட்டர்களில் படத்தை திரையிடும் கியூப் மற்றும் விபிஎப் கட்டணங்களை நாங்கள் செலுத்தி வந்திருக்கிறோம். 

உங்கள் முதலீட்டுக்கு அதிகமான தொகையை செலுத்தி இருக்கிறோம். இனி எங்களால் செலுத்த முடியாது. முந்தையை ஷேர் விகிதங்களை கைவிட்டு அவைகளை மாற்றி அமைக்க வேண்டும். திரையரங்கில் திரையிடப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி தரப்பட வேண்டும். ஓடிக் கொண்டிருக்கும் புதிய படங்களை நிறுத்தாமல் அவைகள் பிக்அப் ஆக வாய்ப்பளிக்க வேண்டும். இதற்காக ஹோல்டுஓவர் சதவிகிதத்தை பேசி முடிவு செய்ய வேண்டும். திரையுலகின் எதிர்காலம் கருதி, மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து சுமுகமான முடிவுகளை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Producers ,Thiel ,
× RELATED ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை