×

படப்பிடிப்பில் 100 பேருக்கு அனுமதி முதல்வர் எடப்பாடியிடம் செல்வமணி கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, படப்பிடிப்பில் 75  பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தது. இதனால் ஒரு சில சிறிய படங்களின் படப்பிடிப்பு மட்டுமே துவங்கியது. இந்நிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது படப்பிடிப்பில் 100 பேர் கலந்து
கொண்டு பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: படப்பிடிப்புகளுக்கு 75 பேருடன் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சிறிய படங்கள் மட்டுமே பணிகளை தொடங்கி உள்ளது. ெகாரோனா ஊரடங்கின் காரணமாக 60 படங்கள் வரையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த படத்தின் பணிகளை தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 100 பேரையாவது படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும். இதனை முதல்வரிடம் கோரிக்கையாக வைத்தோம். அவரும் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்திருக்கிறார் என்றார்.

Tags : Selvamani ,Chief Minister ,shooting ,Edappadi ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...