×

சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

புதுடெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான 18வது `யுத் அபியாத்’ கூட்டு ராணுவப் போர் பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அவுலி மலைப்பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து , சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “உத்தரகாண்ட் கூட்டு போர் பயிற்சியின் மூலம் சீனாவுடனான ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது,’’ என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சீனாவுடனான ஒப்பந்தத்தை இந்தியா மீறவில்லை. இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது என்ற விவகாரத்தில் தலையிட எந்த 3வது நாட்டிற்கும் அதிகாரம் கிடையாது,’’என்று தெரிவித்தார்….

The post சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு appeared first on Dinakaran.

Tags : India ,China ,New Delhi ,18th ``Yud ,Abyad'' ,US ,Uttarakhand's Chamoli district ,Dinakaran ,
× RELATED 18 மாதங்களுக்கு பின் சீன தூதர் பொறுப்பேற்பு