×

தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான இவர் இன்று ஆந்திர பிரதேச மாநில குண்டூரில் உயிரிழந்தார்.

பிரம்மபுத்துருடு படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. ஆறு, ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் அதிக அளவு படங்கள் நடித்துள்ள அவர் உத்தமபுத்திரன் படத்தில் காமெடியான ஒரு ரோலில் நடித்து இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி தற்போது திடீர் மாரடைப்பால் இறந்திருப்பது சினிமா துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். Brahma Puthrudu படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன அவர் அதிக அளவு வில்லத்தனமான, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். ஜெயபிரகாஷ் ரெட்டி கடைசியாக மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படத்தில் தான் நடித்து இருந்தார். ஜெயபிரகாஷ் ரெட்டி மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags : Jayaprakash Reddy ,
× RELATED மாரடைப்பால் போலீஸ்காரர் சாவு