×

விவாகரத்துக்கு பிறகும் வாழ்க்கை

திரையுலகில் காதல் திருமணம் செய்த ஜோடிகளில் பலர், சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர். ஆனால், விவாகரத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே இணக்கம் இருக்கிறது என்பதை அவர்களது வாரிசுகள் உணர்த்திய பல சம்பவங்களை பார்க்க முடிகிறது. ராமராஜன், நளினி மற்றும் பார்த்திபன், சீதா ஜோடி தங்கள் வாரிசுகளின் திருமணத்துக்காக மீண்டும் இணைந்து பணியாற்றினர். சுரேஷ் மேனனை பிரிந்த ரேவதி, பிரியதர்ஷனை பிரிந்த லிசி, பிரகாஷ்ராஜை பிரிந்த லலிதகுமாரி, திலீப்பை பிரிந்த மஞ்சு வாரியர் உள்பட சிலர், தங்கள் தொழில் சார்ந்த விஷயங்களுக்காக அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. 

பிரியாராமனை காதல் திருமணம் செய்த ரஞ்சித், 14 வருடங்களுக்கு பிறகு மனைவியை விவாகரத்து செய்தார். பிறகு ராகசுதாவை 2வது திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பிரியாராமனை தனது மகன்களுக்காக பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. விவாகரத்துக்கு பிறகும் இவர்களுக்கு இடையே வாழ்க்கை இருக்கிறது என்பதையே இவர்களின் செயல் உணர்த்துகிறது.

Tags :
× RELATED நலவாரிய ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்பிப்பது அவசியம்