×

ஆரவ் திருமணத்தை புறக்கணித்த ஓவியா

ஓ காதல் கண்மணி, சைத்தான், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் நடித்த ஆரவ், தற்போது ராஜபீமா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஒரு பாடல் காட்சியில் ஓவியா நடனம் ஆடியுள்ளார். ஏற்கனவே ஆரவ், ஓவியா இருவரும் காதலித்து வந்தனர். இத்தகவல் மீடியாவில் வெளியானதால் டென்ஷனான அவர்கள், ‘நாங்கள் நண்பர்கள் மட்டுமே. காதலர்கள் இல்லை’ என்று ஒரேமாதிரி பதிலளித்தனர். இந்நிலையில், நேற்று புதுமுகம் ராஹே என்பவரை ஆரவ் திடீரென்று காதல் திருமணம் செய்துகொண்டார். கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா இமை போல் காக்க என்ற படத்தில், வருண் ஜோடியாக நடித்து வருகிறார் ராஹே. 

அவரும், ஆரவ்வும் ஆரம்பகாலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டபோது நெருங்கி பழகினர். பிறகு அவர்கள் காதலித்தனர். இதையறிந்த பெற்றோர்கள் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியதால், நேற்று ஆரவ், ராஹே திருமணம் நடந்தது. இதில் ஆரவ்வுக்கு பழக்கமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். ஆனால், ‘ஆரவ் என் நண்பர்’ என்று சொன்ன ஓவியா, திருமணத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். சமூக வலைத்தளத்திலும் அவர் வாழ்த்து செய்தி பதிவு செய்யவில்லை.

Tags : Ovia ,Arav ,
× RELATED என் அழகை பற்றி கவலைப்படாதீங்க... ரசிகருக்கு ஓவியா டோஸ்