ஹாலிவுட் படத்தில் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ்

ஹாலிவுட்டில் நெப்போலியன் அறிமுகமான டெவில்’ஸ் நைட் படத்தின் ரிலீசுக்கு பிறகு கைபா பிலிம்ஸ் சார்பில் டெல் கே.கணேசன் தயாரித்துள்ள படம், ட்ராப் சிட்டி. இதில் நெப்போலியன், டாக்டர் வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளனர். தவிர, ஹாலிவுட் நடிகர் பிரான்டன் டி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ரிக்கி பர்செல் இயக்கியுள்ளார். 

அவர் கூறுகையில், ‘கஷ்டப்படும் ஒரு ராப் பாடகர், போதைப் பொருள் கடத்தல் தலைவனிடம் பணிபுரிகிறார். ராப்பராக நடிக்கும் பிரான்டன் டி ஜாக்சன் உருவாக்கும் பாடல், அவர் கைது செய்யப்படுவதற்கு முன் வைரலாகிறது. அப்போது நடக்கும் துப்பாக்கிச்சூடு அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. விரைவில் இந்தப் படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது’ என்றார்.

Related Stories: