×

ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் உலகின் மிகப்பெரிய எரிமலை : 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றம்

ஹவாய்: அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா எரிமலை வெடித்து சிதறி நெருப்புக் குழம்புகள் வெளியேறி அனல் ஆறாக காட்சியளிக்கிறது. அதே வேளையில் ஆபத்தை பொருட்படுத்தாமல் எரிமலை வெடிப்பை காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். மேற்கு பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஹவாய் தீவில் மௌனா லோவா எரிமலை உள்ளது. உலகில் மிகப்பெரிய எரிமலையான இங்கு கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டு எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு முன்னர் சராசரியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடித்து சிதறிய எரிமலை 38 ஆண்டுகள் கழித்து இப்போது வெடித்து தொடங்கி உள்ளன. கடந்த 27-ம் தேதி வெடிக்க ஆரம்பித்த இந்த எரிமலையில் தற்போது நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. சுமார் 165 அடி உயரத்துக்கு லோவா சிதறல்கள் எழும்புவதால் அந்த ஹவாய் தீவில் இருந்து மக்கள் சுமார் 2 லட்சம் பேர் வெளியெற்றப்பட்டனர். 5,271 சதுர அடி கிலோமீட்டர் பரப்பளவில் கொண்ட இந்த எரிமலையானது அந்த தீவின் சரிபாதி பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. மௌனா லோவா எரிமலை வெளியிடும் வாயுக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை வெளிபடுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் எரிமலை வெடிப்பை காண சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். தற்போது எரிமலையால் அச்சுறுத்தல் இல்லை என்றும் ஆனால் வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் எனவும் நெருப்புக் குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததால் இதை ஆராய்ச்சி செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும்  புதிய தலைமுறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்….

The post ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் உலகின் மிகப்பெரிய எரிமலை : 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Hawaii ,Mauna Loa ,United States ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!