×

சின்னமனூர் சந்தையில் மூட்டை மூட்டையாக காய்கறிகள் தேக்கம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் பல்வேறு காய்கறிகளை விளைவிக்கின்றனர். இந்த காய்கறிகளுக்காக சின்னமனூர் பகுதியில் ஏலச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் விவசாயிகள் வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், பச்சைமிளகாய், முருங்கக்காய், சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மொத்தமாக கொண்டுவந்து இந்த ஏல சந்தையில் சேர்க்கின்றனர். இந்த காய்கறிகளை கேரள, தமிழ்நாடு வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் விட்டுவிட்டு பெய்து வருவதால், தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து, ஏல சந்தைக்கு சுமார் 220 டன் காய்கறிகள் வருகிறது. இந்த காய்கறிகளை மழையின் காரணமாக வாங்கி செல்வதில் தமிழக, கேரள வியாபாரிகளிடையே மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏலச் சந்தையில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக அதிக விலைக்கு விற்ற காய்கறிகள், தற்போது விலை குறைய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்….

The post சின்னமனூர் சந்தையில் மூட்டை மூட்டையாக காய்கறிகள் தேக்கம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur market ,Chinnamanur ,Mullaip Periyartu ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்