×

நடிகர் ஆரவ் காதல் திருமணம்: நடிகையை மணந்தார்

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர், ஆரவ். பிறகு சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது ராஜபீமா என்ற படத்தில் நடிக்கிறார். அவரும், நடிகை ஓவியாவும் காதலிப்பதாக வெளியான தகவலை இருவரும் மறுத்தனர். நாங்கள் நண்பர்கள் என்று மட்டுமே சொன்னார்கள். இந்நிலையில், நேற்று திடீரென்று ஆரவ் திருமணம் செய்துகொண்டார். அவருக்கும், புது நடிகை ராஹே என்பவருக்கும் நடைபெற்ற திருமண விழாவில் தமிழ் நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். 

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஜோஷ்வா இமை போல் காக்க என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ராஹே, இதற்கு முன் மாடலிங் செய்தார். அப்போது அவருக்கும், ஆரவ்வுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் ஆரவ், ராஹே திருமணம் நடந்தது.

Tags : Arav ,actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...