அக்‌ஷராவுக்கு ரெஜினா சிபாரிசு

உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், போகன், மாயவன் உள்பட பல படங்களில் நடித்தவர், அக்‌ஷரா கவுடா. எல்லா படத்திலும் வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ள அவர், தற்போது கார்த்திக் ராஜூ இயக்கும் சூர்ப்பனகை என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் கூறுகையில், ‘முன்னணி ஹீரோக்களின் படம் என்று நினைத்துதான் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன். ஆனால், அதுவே எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தி விட்டது. நெகட்டிவ் கேரக்டரிலும், கவர்ச்சியாக நடிக்கவும்தான் நான் தகுதியானவள் என முடிவு செய்து விட்டனர்.

தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் நடிக்கும்படி என்னை அணுகினர். இதனால் பல படங்களை நிராகரித்து விட்டேன். சூர்ப்பனகை படத்தில் எனது கேரக்டரில் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் இருந்தாலும், ரசிகர் கள் பார்வையில் அது நேர்மையாக இருக்கும். உண்மையிலேயே இது எனக்கு வித்தியாசமான கேரக்டர்.  என்னை தேர்வு செய்த  இயக்குனருக்கும், சிபாரிசு செய்த ஹீரோயின் ரெஜினாவுக்கும்  நன்றி. இந்தப் படத்துக்கு பிறகு எனது இமேஜ் மாறி, நல்ல கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories: