×

கரீனா கபூர் உதவி

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உடைகள் (ஆன்ட்டி மைக்ரோபியல் டிசர்ட்) வழங்கிஉள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, மும்பை லோகமான்யா திலக் மருத்துவமனை, பெங்களூரு சக்ரா வேர்ல்ட் மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கியுள்ள கரீனா கபூர், படிப்படியாக மற்ற மருத்துவமனைகளுக்கும் உதவி செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார். தைமூர் என்ற மகனுக்கு தாயான அவர், தற்போது 2வது முறை கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய கணவர் சயீப் அலிகான், இந்தி உள்பட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஆதி புருஷ் என்ற படத்தில் வில்லனாக நடிக்கஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

Tags : Kareena Kapoor ,
× RELATED மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில்...