×
Saravana Stores

நுரையீரல் தொற்றால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகர் சீரியஸ்

பெங்களூரு,: நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கன்னட நடிகர் கிருஷ்ணா ஜி ராவ், பெங்களூரு மருந்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னட திரைத்துறையின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ், கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிககப்பட்டார். அவரது உடல்நிலை மோசடைந்துள்ளதால், தற்போது ஐசியூ-வில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் பார்வையற்றவராக நடித்து, ‘கே.ஜி.எஃப்’ தாத்தா எனப்  புகழ்பெற்ற இவர், கேஜிஎஃப் – 2 உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். …

The post நுரையீரல் தொற்றால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Krishna G Rao ,Bangalore ,Serious ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...