×

வெப்சீரிஸ் தயாரிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழில் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா, குட்லக் சகி, ரங் தே, மலையாளத்தில் மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ். கொரோனா லாக்டவுன் காரணமாக கேரளாவிலுள்ள தனது குடும்பத்தினருடன் பல மாதங்கள் தங்கியிருந்த அவர், தற்போது தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்கஐதராபாத் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் வெப்சீரிஸ் கதை கேட்டு, அது தனக்கு மிகவும் பிடித்து இருப்பதால் தயாரிப்பாளராக மாற இருப்பதாக தெலுங்கு படவுலகில் தகவல் பரவியது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் விசாரித்தபோது, ‘தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். சொந்த படம் தயாரிப்பது பற்றியோ அல்லது வெப்சீரிஸ் உருவாக்குவது பற்றியோ எந்த முடிவும் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாத தகவல்களுக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.

Tags : Keerthi Suresh ,
× RELATED மணிரத்னம் வெப்சீரிஸில் பார்வதி