×

லாஸ்ஏஞ்சல்ஸில் பங்களா வாங்கினாரா பிரபாஸ்?

லாஸ்ஏஞ்சல்ஸில் நடிகர் பிரபாஸ் பங்களா வாங்கியிருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இந்த படத்துக்கு அவர் ரூ.70 கோடி சம்பளம் வாங்கினார். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார். ராதே ஷியாம், ஆதி புருஷ், நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய 3 படங்களில் அவர் நடிக்கிறார். 

இதன் மூலம் ரூ.300 கோடி சம்பளமாக அவர் பெற உள்ளார். இதற்கிடையே அவர் லாஸ்ஏஞ்சல்ஸில் பல கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்கியிருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இது பற்றி பிரபாஸ் எதுவும் கூறவில்லை. அதே சமயம், லாக்டவுனுக்கு முன்பே இந்த பங்களாவை அவர் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags : Prabhas ,bungalow ,Los Angeles ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்