×

விஜய் சேதுபதியுடன் இணையும் டாப்ஸி

இந்தியில் பிசியாக நடித்து வருகிறார் டாப்ஸி. அதே நேரம், அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடிக்கிறார். தற்போது ஜெயம் ரவி ஜோடியாக அகமது இயக்கும் ஜனகணமன படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். இதில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில்தான் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு நடிக்க உள்ளார். செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜெய்ப்பூரில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்காக படக்குழுவினர் விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றுள்ளனர். 

Tags : Topsy ,Vijay Sethupathi ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்