×

ஸ்ருதியின் புதிய அணுகுமுறை

ஆங்கில இசை ஆல்பம் தயாரிப்பதற்காகவே அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறாராம் ஸ்ருதிஹாசன். பாடல் எழுதுவது, மெட்டமைத்து பாடுவது, நடிப்பது என்று ஆல்பம் சம்பந்தமான விஷயங்களில் முழுமையாக ஈடுபட்டுள்ள அவர், சந்தர்ப்பம் கிடைக்கும்போது தமிழ் சினிமாவில் நடிக்கிறார். மற்றபடி இந்திக்கும், தெலுங்குக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறார். காரணம், அந்த மொழிகளில் அதிக கவர்ச்சி காட்டி நடித்தாலும் யாரும் திட்ட மாட்டார்கள். நடிப்பதற்கு சம்பளமும் அதிகம். இதனால்தான் தமிழில் அவருக்கு புதுப்படம் கிடைப்பதில்லை என்ற விஷயத்தை தாமதமாக புரிந்துகொண்ட அவர், தற்போது தனது அணுகுமுறையை மாற்றியிருக்கிறார். அதாவது, அவரை எந்த இயக்குனர் அணுகினாலும் சுலபமாக கதை சொல்ல முடியும். அவரது தந்தை கமல்ஹாசனின் தலையீடு சிறிதளவும் கிடையாது என்கிறார்.

Tags : Sruthi ,
× RELATED ஐதராபாத்தில் காரை அழகான கடையாக...