×

சூர்ப்பனகை வேடத்தில் லட்சுமி மன்ச்சு?

பாகுபலி, பாகுபலி 2, சாஹோ ஆகிய படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் பல மொழி படம், ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கும் இது, ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் சமூக கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், தீமையை வெல்லும் நன்மை என்ற வாசகமும், ராமர் வேடத்தில் இருந்த பிரபாஸ் தோற்றமும் இதை உறுதிப்படுத்தி இருப்பதால், ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர் என்ற தகவல் பரவியுள்ளது. தற்போது இணையதளங்களில் இப்படம் குறித்து ரசிகர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். ராமாயணத்தில் சூர்ப்பனகை வில்லி என்பதால், அனைத்து சம்பவங்களுக்கும் அவர் மூலகாரணமாக இருப்பார். 

அந்த கேரக்டரில் நடிக்க லட்சுமி மன்ச்சு தகுதியானவர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், லட்சுமி மன்ச்சுவை சூர்ப்பனகையாக டிசைன் செய்த போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளான லட்சுமி மன்ச்சு, நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பல படங்களை தயாரித்துள்ளார். தமிழில் வெளியான கடல், மறந்தேன் மெய் மறந்தேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Tags : Lakshmi Manchu ,Surpanagai ,
× RELATED போலீஸ் வேடத்தில் லட்சுமி