லாக்டவுனில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங்

தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான், கமல்ஹாசனுடன் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங், புதிதாக ஒரு இந்திப் படத்திலும், ஒரு கன்னடப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாமல் இருந்த ரகுல் பிரீத், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்தியில் அர்ஜூன் கபூர் ஜோடியாக அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. 

இதில் பங்கேற்றுள்ள அவர், கன்னடத்தில் கிச்சா சுதீப் ஜோடியாக பாண்டம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கியது. இவ்விரு படங்களின் ஷூட்டிங்கிற்காக ஜதராபாத்துக்கும், மும்பைக்கும் விமானத்தில் பறந்து ெகாண்டிருக்கும் ரகுல் பிரீத், ‘விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன் உற்சாகமாக கிளம்பிச் செல்லும் மாணவியை போன்ற மனநிலையில் இருக்கிறேன். கேமரா, மேக்கப், ஸ்டார்ட் கேமரா, ஆக்‌ஷன், சைலன்ஸ் என்று, எனக்கான சினிமா உலகத்துக்கு மீண்டும் திரும்பி இருக்கிறேன்’ என்றார்.

Related Stories:

>