×

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு: சுதா கொங்கரா தகவல்

சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா நடித்துள்ள படம், ‘பராசக்தி’. சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ என்ற படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பு தவிர எந்த சம்பந்தமும் இல்லை. முதல்முறையாக இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். ‘துரோகி’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ ஆகிய படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம் என்பதும், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. கடந்த 1970களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இப்படம், இந்தி திணிப்பு தொடர்பான படமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சுதா ெகாங்கரா தெரிவித்துள்ளார்.

Tags : Sudha Kongara ,Chennai ,Sivakarthikeyan ,Ravi Mohan ,Atharva Murali ,Leela ,Sivaji Ganesan ,Ravi K. Chandran ,G.V. Prakash Kumar ,
× RELATED குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்