விமானம் போன்ற காரை விற்கிறார் ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன்

ராக்கி, த எக்ஸ்பென்டபிள் உள்பட பல ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர், சில்வெஸ்டர் ஸ்டாலோன். கடைசியாக ராம்போ: த லாஸ்ட் பிளட் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது அவர் தனியார் ஜெட் விமானத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும் நிறைந்த பிரமாண்டமான சொகுசு கார் வைத்துள்ளார். அந்த கருப்பு நிற காரில், மொபைல் இன்டர்நெட், சாய்ந்த இருக்கைகள், 43 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி டிவி உள்பட பல வசதிகள் இருக்கின்றன. 

இதை 4 லட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருந்தார். தற்போது அந்த காரை 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்க முடிவு செய்துள்ளார். இதுபோன்ற ஆடம்பரமான சொகுசு கார் உலகிலேயே சிலரிடம் மட்டும்தான் இருக்கிறது. இந்த காரை பெக்கர் ஆட்டோமேட்டிவ் டிசைன் என்ற நிறுவனம் வடிவமைத்தது. இந்நிறுவனமே இந்த காரை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

Related Stories: