சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் வயலில் நாற்று நடும் மலையாள நடிகை: ரசிகர்கள் பாராட்டு மழை

மலையாள நடிகை வயலில் இறங்கி நாற்று நட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாள   சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அனுமோள். இவர் கேரளாவை சேர்ந்தவர்   என்றாலும் ‘கண்ணுக்குள்ளே’ என்ற தமிழ் திரைப்படம் மூலம் சினிமாவில்   அறிமுகமானார். இதன்பின் ராமர், சூரன், திலகர், ஒருநாள் இரவில் என்பன உட்பட ஏராளமான தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரது   சொந்த ஊர் பாலக்காடு அருகே ஒற்றப்பாலம். இவரது குடும்பத்துக்கு சொந்தமாக வயல் உள்ளது. ஓய்வு நேரத்தில் அனுமோள் இந்த வயலில் இறங்கி வேலை   பார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு   இவரது வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் வீடியோ   எடுத்து யூ-டியூப்பில் வெளியிட்டார். இது தற்போது சமூக வலைத்தளங்களில்   வைரலாக பரவி வருகிறது. விவசாயத்தை வெறுக்கும் இளைய   தலைமுறையினருக்கு, நடிகை அனுமோளின் இந்த செயல் முன்னுதாரணமாக உள்ளது என   கூறி சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: