×

சோனாக்‌ஷியை ஆபாசமாக விமர்சித்த இளைஞர் கைது

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. தமிழில் லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சோனாக்‌ஷியின் பேஸ்புக், டுவிட்டரில் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் சோனாக்‌ஷி சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகினார். என்றாலும் சிலர் அவரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்கள். இதனால் தன்னை பற்றி கடுமையாகவும், ஆபாசமாகவும் விமர்சிப்பவர்களை கண்காணிக்க ஒரு குழு ஒன்றை அமைத்தார். 

அந்த குழு தொடர்ந்து சோனாக்‌ஷி பற்றி ஆபாசமாக விமர்சித்து வரும் அகமதாபாத்தை சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் என்ற இளைஞரை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து சசிகாந்த் மீது சோனாக்ஷி மும்பை க்ரைம் பிரிவில் புகார் செய்தார். அதன்படி 27 வயதான சசிகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனாக்‌ஷி, ‘எங்கள் குழுவின் முயற்சியால் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகவலைத்தளத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதே எங்கள் குழுவின்நோக்கம். இந்த பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்’ என்றார்.

Tags : Sonakshi ,
× RELATED பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை சோனாக்‌ஷிக்கு ‘பிடிவாரன்ட்’