×

நடிக்காத படத்திற்கு விளம்பரம் யோகிபாபு வருத்தம்

காமெடி நடிகர் யோகிபாபு பிரபலமாவதற்கு முன்பு நடிக்க வாய்ப்பு தேடிய காலத்தில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தார். அந்த படங்கள் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டு யோகி பாபு போட்டோவை பெரியதாக போட்டு அவர் ஹீரோவாக நடித்த படம்போன்று விளம்பரம் செய்து வருவதாகவும், இதன் மூலம் தான் தற்போது நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் ஏற்கெனவே யோகி பாபு கூறியிருந்தார். 

தற்போது தௌலத் என்ற படத்திற்கு யோகி பாபு படம் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். அந்த படத்தில் யோகி பாபு நடிக்கவே இல்லையாம். படத்தின் விளம்பரத்தை பார்த்த யோகிபாபு, அந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த பிரச்னைகளை சமாளிக்க சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகிறார் யோகி பாபு.

Tags : Yogibabu ,
× RELATED பெண் கேரக்டரில் யோகிபாபு