கவுதம் கார்த்திக், அதர்வா எனக்கு நண்பர்கள் மட்டுமே: சொல்கிறார் பிரியா ஆனந்த்

கவுதம் கார்த்திக், அதர்வா எனக்கு நண்பர்கள் மட்டும்தான். அவர்களில் யாரையும் நான் காதலிக்கவில்லை என்கிறார் பிரியா ஆனந்த். வாமனன், எதிர்நீச்சல், வை ராஜா வை, அரிமா நம்பி, எல்கேஜி உள்பட பல படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். வை ராஜா வை படத்தில் நடித்தபோது கவுதம் கார்த்திக்குடன் இவர் நெருங்கிப் பழகுவதாக தகவல் பரவியது. இதையடுத்து இரும்பு குதிரை படத்தில் அதர்வா ஜோடியாக அவர் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. இது பற்றி இதுவரை பதில் சொல்லாமல் இருந்த பிரியா ஆனந்த் இப்போது பேசியிருக்கிறார்.அவர் கூறும்போது, ‘கவுதம் கார்த்தி, அதர்வா இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் மட்டும்தான். கவுதமையும் நான் காதலிக்கவில்லை. அதர்வாவையும் காதலிக்கவில்லை. இதை மூவருமே உறுதியாக சொல்வோம். ஒருவரையொருவர் நலம் விரும்பும் நல்ல நட்புடன் நாங்கள் பழகி வருகிறோம்’ என்றார்.

Related Stories: