×

ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ‘Mission Chennai ‘ என்ற திட்ட வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ‘Mission Chennai ‘ என்ற திட்ட வாகனத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கி, சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ‘Mission Chennai ‘ என்ற திட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.  மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், இன்று (01.12.2022) போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 22 விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, ஏனைய 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது.    இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ‘Mission Chennai’ என்ற திட்ட வாகனத்தை (Mobile Medical Vehicle) கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். …

The post ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ‘Mission Chennai ‘ என்ற திட்ட வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Transport Minister ,Sivasankar ,Hyundai Motor India Ltd. ,Chennai ,Sivasangar ,Hyundai Motor India Ltd ,Hyundai Motor India Limited ,Dinakaran ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...