×

‘லாக்அப்’பில் சாத்தான்குளம் சம்பவம்

ஜருகண்டி படத்திற்கு பிறகு நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ள லாக்அப் படம் இன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வைபவ், வாணி போஜன், வெங்கட்பிரபு, பூர்ணா நடித்துள்ள இந்த படத்தை மோகன்ராஜா உதவியாளர் சார்லஸ் பிரபு இயக்கி உள்ளார். இது குறித்து நிதின் சத்யா கூறியதாவது: லாக்அப்பில் நடக்கும் ஒரு சம்பவத்தின் பின்னணியை ஆராயும் துப்பறியும் திரில்லர் படம். இந்த படத்தின் கதையும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவமும் கிட்டதட்ட ஒரே மாதிரியானது. ஆனால் அந்த சம்பவத்துக்கு முன்பே நாங்கள் படத்தை முடித்து விட்டோம். வெங்கட் பிரபு இன்ஸ்பெக்டராகவும், வைபவ் கான்ஸ்டபிளாகவும் நடித்துள்ளனர். எங்கள் தகுதிக்கு மீறிய பட்ஜெட்டில் படம் உருவாகியுள்ளது. தியேட்டருக்காக காத்திருந்தால் வாங்கிய கடனுக்கு மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என்றார்.

Tags : Sathankulam ,incident ,Lockup ,
× RELATED சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் மூதாட்டிக்கு மிரட்டல்