×

கொரோனா ஊரடங்கில் மன அழுத்தம் தொகுப்பாளினி தற்கொலை

பாலிவுட்டில் சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. தற்போது இந்தி சேனல் ஒன்றின் தொகுப்பாளினி பிரியா ஜூனேஜா மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அவரது உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து பிரியா ஜூனேஜா பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாகவும், இதனால் அவர் கடும் மன அழுத்ததில் இருந்ததாகவும் உறவினர்கள் கூறியிருக்கிறார்கள். என்றாலும் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags : hostess ,suicide ,Corona ,
× RELATED முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி...