×

உலக கோப்பை கால்பந்து போட்டி; தோல்வியை கொண்டாடிய இளைஞர் சுட்டுக் கொலை: ஈரானில் மேலும் பதற்றம்

தெஹ்ரான்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் வெளியேற்றப்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடிய நிலையில், ஈரான் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி அமெரிக்காவிடம் தோற்றது. இதனை ஈரான் மக்கள் தெருவில் வந்து கொண்டாடினர். வழக்கத்திற்கு மாறாக ஈரான் மக்கள் தோல்வியை கொண்டாடியதற்கு காரணம், அந்நாட்டு அரசின் மீதான கோபம்தான் காரணம். அதாவது ஈரானிய பெண்கள் அணியும் ஆடைகளுக்கு அதிக கட்டுப்பாடுகளால் விதிக்கப்படுவதால் கடும் அதிருப்தி உள்ளனர். மேலும் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஈரான் வெளியேறியதை காஸ்பியன் கடல் கடற்கரை பகுதியில் கொண்டாடிய மெஹ்ரான் சமக் (27) என்ற இளைஞரின் தலையில் குறிவைத்து பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தால் ஈரான் நாட்டில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே நடந்து வரும் போராட்டங்களால், 18 வயதுக்குட்பட்ட 60 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 448 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. …

The post உலக கோப்பை கால்பந்து போட்டி; தோல்வியை கொண்டாடிய இளைஞர் சுட்டுக் கொலை: ஈரானில் மேலும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : World Cup Football Tournament ,Iran ,Tehran ,World Cup football match ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...