×

 விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சிக்கு 8 வழிச்சாலை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். இப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. “இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்தும் கூட, அது குறைந்தபட்சம் 6 வழிச்சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ மேம்படுத்தப்படாதது தான் விபத்துகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.  சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக ஒன்றரை லட்சம் என்ற அளவை அடுத்த சில மாதங்களில் எட்டக்கூடும். அத்தகைய சூழலில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும். அதற்காக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post  விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சிக்கு 8 வழிச்சாலை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai-Trichy ,Anbumani ,Union Government ,Chennai ,Chennai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....