×

ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பு உயர் நீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி. கல்லூரி அறிக்கை: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.எம்.சி மருத்துவமனைக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 10 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் சிசிடிவி கேமராக்கள்மூலம்கண்காணிக்கப்படுகிறது. ராகிங் சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. முதலாமாண்டு மாணவர்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்….

The post ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பு உயர் நீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி. கல்லூரி அறிக்கை: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : High Court of Vellore C. ,MM RC College ,iCordt ,Chennai ,Vellore Christian Medical College ,CM) ,MM C ,Vellore C. ,High Court of 24-Hour Security ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் மீன்பிடிக்கும்...