×

விவசாயிகளுக்கு நிலம் வழங்கிய நடிகை

ரஜினிகாந்த் நடித்த நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜூஹி சாவ்லா. பிரபல பாலிவுட் நடிகை. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் நடித்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஜூஹி சாவ்லா பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகவும், இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறவர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதற்காக பணியாற்றி வருகிறவர். சமீபத்தில் இவர் வீட்டுக்கு பிளாஸ்டிக் பைகளில் வந்த காய்கறிகளின் படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு “படித்தவர்களே இப்படி செய்கிறார்கள். இதனை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.

ஜூஹி சாவ்லாவுக்கு மும்பைக்கு அருகே மிகப்பெரிய விவசாய பண்ணை உள்ளது. அதில் விவசாயம் செய்து கொள்ள அக்கம் பக்கத்தில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு தற்காலிகமாக வழங்கி உள்ளார். இயற்கை உரமிட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளார். தற்போது அங்கு விவசாயிகள், விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

Tags : actress ,land ,
× RELATED நடிகையை வெளியே விரட்டிய மருத்துவமனை: அமைச்சர் கண்டனம்