×

படம் இயக்க தயாராகிறார் நெப்போலியன்

தமிழ்  உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நெப்போலியன், இப்போது  முதல்முறையாக 3 ஆங்கில படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர்  கூறுகையில், ‘திருச்சியை சேர்ந்த டெல் கணேசன் என்னை அணுகியபோது,  ஆங்கில படத்தில் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அவரது இயக்கத்தில் 3  படங்களில் நடித்துள்ளேன். இதில் சில படங்கள் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.  தமிழ் படங்களில் கொஞ்சம் மிகையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்கலாம்.  ஆங்கில படங்களில் யதார்த்தமாக நடிக்க வேண்டும். ஆங்கிலம் பேசி நடிப்பது  முதலில் சிரமமாக இருந்தது. இத்தனை வருட சினிமா அனுபவத்தை வைத்து, விரைவில்  படம் இயக்க என்னை தயார்ப்படுத்தி வருகிறேன்’ என்றார். 

Tags : Napoleon ,
× RELATED கம்பத்தில் நகர் மன்ற அவசரகூட்டம்