×

பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் 1500-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் போராட்டம்: மீனவர்களுடன் சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பலவேற்கடை சுற்றி 30-க்கு மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராம மக்கள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. ஒரு தரப்பினர் கடலில் மீன் பிடித்தொழிலும், மற்றொரு தரப்பினர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்தொழிலும் செய்து வருகின்றனர். கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் கடலில் மீன் பிடித்தொழிலை செய்து வந்தாலும், வாரத்திற்கு 2 நாள் அவர்கள் பழவேற்காடு ஏரியில் காலம் காலமாக மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் பழவேற்காடு பகுதியில் மீன் பிடிப்பதற்கு 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பழவேற்காடு ஏரியில் மீன்பிடி உரிமையை பெற்றுள்ள ஆண்டிகுப்பம், கோட்டை குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட 9 கிராம மக்கள் கூனங்குப்பம் மீனவ மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி தடுத்ததால் கடந்த 8 மாதங்களாக கூனங்குப்பம் மீனவ மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழிலை செய்யாமல், இந்த பிரச்சனை தொடர்பாக வருவாய் துறை, மீன்வள துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனவே, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், கூனங்குப்பம் கிராம மக்கள் இன்று ஊரை விட்டு வெளியேறுவதாக கூறி மீன்பிடி வலைகளை எடுத்து கொண்டு பழவேற்காடில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்து ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடைபயணமாக போராட்டம் செய்து வரும் மீனவ மக்களை காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.  1,500க்கு மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கு நடைபயணம் மேற்கொண்டனர். திருபாலைவனத்தில் நடைபயணமாக சென்ற கூனங்குப்பம் மீனவர்களை தடுத்து நிறுத்தி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருடன் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.           …

The post பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் 1500-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் போராட்டம்: மீனவர்களுடன் சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Konangapam ,Paradigm ,Thiruvallur ,Konangapam Fisheries ,Paravavedam ,Thiruvallur district ,Ponneri ,Palaveluddadadha ,Konangambam ,Sar-Arthur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்