×

6 படத்தில் இருந்து நீக்கம் பதிவை நீக்கிய வித்யா

சைவம்  படத்தில் நடித்தார் வித்யா பிரதீப். அதன்பிறகு அச்சமின்றி, மாரி 2,  தடம் படங்களில் நடித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வித்யா தனது  இன்ஸ்ட்டாகிராமில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘நடிப்புக்கு  சம்பந்தமில்லாத காரணங்களால் 6 படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.  எந்த பின்புலமும் இல்லாத நடிகைகள் சினிமாவில் சமரசத்துக்கு இடமளிக்காமல்  வெற்றி பெறுவது கஷ்டம். நடிப்பை மட்டுமே எதிர்பார்க்கும் இயக்குனர்கள்  ஓரிருவர்தான் இருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால்  மறுநாளே அந்த பதிவை நீக்கி விட்டார். சினிமாவை சேர்ந்த சில முக்கிய  இயக்குனர்கள், நடிகர்கள், சில நண்பர்கள் அந்த பதிவால் பல இயக்குனர்களின்  மனம் புண்படுவதாகவும், அடுத்த பட வாய்ப்புகள் அமையாது என்றும் சொன்னதால்  வித்யா அதை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் அந்த பதிவை  முன்பே நெட்டிசன்கள் காப்பி பேஸ்ட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

Tags : Vidya ,
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்