×

அப்பா, மகள் பாசத்தை சொல்லும் எந்தை

வினிஷா விஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம், எந்தை. இதில் வினிஷா விஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.வி.கதிரவனும், அவரது மகள் வினிஷா கதிரவனும் தந்தை, மகளாக நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கண்ணன் இசை அமைத்துள்ளார். விஜய் டி.குமார் இயக்கி உள்ளார். தனக்கு செல்போன் வாங்கித் தராத தந்தை மீது கோபத்தில் இருக்கிறாள் மகள், அவளிடம் கிராமத்து தந்தை ஒருவர் தன் மகள் தனக்கு எழுதிய கடிதத்தை படித்து காட்டுமாறு கொடுக்கிறார். அந்த கடித்தில் தந்தையோடு இருந்தபோது அவரை புரிந்து கொள்ளாத ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அவரின் மகள். அதை படிக்கும்போது அருகில் இருந்தும் தந்தையின் அன்பையும் அக்கறையையும் புரிந்து கொள்ளாததை உணர்ந்து கண்ணீரோடு மகள், தந்தையை தேடிச் செல்வது மாதிரியான கதை. 7 நிமிட குறும்படத்தில் தந்தை, மகள் பாசம். ஒரு நடுத்தர விவசாயி தன் குடும்பத்தை சுமக்க படும் துயரங்கள். இயற்கை உணவின் முக்கியம் என பல விஷயங்களை படம் பேசுகிறது.

படம் பற்றி கே.வி.கதிரவன் கூறியதாவது: பொதுவாக குழந்தைகள் தாயிடம் காட்டும் அன்பை தந்தையிடம் காட்டுவதில்லை. அதனால் தந்தையின் உழைப்பும், தியாகமும் அவர்களுக்கு தெரியாமல் போகிறது. தந்தையர் தினத்தில் அதனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். அதோடு ஒரு நடுத்தர விவசாயியின் வாழ்க்கை, துயரம், இயற்கையோடு இணைந்து நம் வாழ்க்கை, உணவுமுறை ஆகியவற்றையும் சொல்ல நினைத்தேன். 7 நிமிடத்துக்குள் அதை சொல்ல முயற்சித்திருக்கிறேன். தந்தையர் தினத்தன்று யு டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த படத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்றார்.

Tags : Daddy ,daughter-in-law ,
× RELATED மலையாளப் படத்துக்கு இசை அமைக்கிறார் அனிருத்