×

ஜிப்மர் மருத்துவமனைக்கு 433 நர்ஸ்கள் தேவை

பணி: Nursing Officer- 433 இடங்கள் (பொது-175, பொருளாதார பிற்பட்டோர்-43, ஒபிசி-116, எஸ்சி-66, எஸ்டி-33). சம்பளம்: ரூ.44,900.வயது: 1.12.2022 தேதியின்படி 18 முதல் 35க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: B.Sc., Nursing அல்லது Diploma in General Nursing and Midwifery படிப்பை முடித்து இந்திய நர்சிங் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.ஜிப்மர் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசி ஆகியோருக்கு ரூ.1500. எஸ்சி/எஸ்டி யினருக்கு ரூ.1200. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.jipmer.edu.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.2022.

The post ஜிப்மர் மருத்துவமனைக்கு 433 நர்ஸ்கள் தேவை appeared first on Dinakaran.

Tags : Jipmar Hospital ,Dinakaran ,
× RELATED ஜிப்மர் மருத்துவர் தற்கொலை முயற்சி- பரபரப்பு