×

சோனாக்‌ஷி திடீர் விலகல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் தற்கொலையை  தொடர்ந்து  பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கும் மற்றும் சுஷாந்த் சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. இதனால் பதிலளிக்க முடியாமல் சோர்ந்து போன வாரிசு நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, நேற்று டிவிட்டரில் இருந்து தனது அக்கவுண்ட்டை நீக்கிவிட்டார். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா என்ற படத்தில் நடித்த அவர், தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பினாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

Tags : Sonakshi ,departure ,
× RELATED கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம்...