×

ஹீரோயின் ஆகிறார் சாதனா

ராம் இயக்கிய தங்கமீன்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சாதனா. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அவர், பிறகு ராம் இயக்கிய பேரன்பு படத்தில், மனவளர்ச்சி குன்றிய சிறுமி கேரக்டரில் சிறப்பாக நடித்தார். தற்போது சாதனாவுக்கு 18 வயதாகிறது. எனவே, விரைவில் அவர் ஹீரோயினாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம். தற்போது துபாயில் பெற்றோருடன் வசித்து வரும் அவர், அங்கு பள்ளியில் படித்து வந்த மேற்படிப்புக்காக இந்தியா வருவதால், அப்போது ஹீரோயினாக நடிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. அடிப்படையில் சாதனா பரத நாட்டியகலைஞர் என்பதால், கொரோனா விழிப்புணர்வு நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags : Sadhana ,
× RELATED தொழில் போட்டி காரணமாக திருநங்கையை கொலை செய்த 4 திருநங்கைகள் கைது