×

ராணுவ வீரர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் ரூ.5 லட்சம் நிதி

பிரபல தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ். நயன்தாரா நடித்த அறம், ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது இந்திய எல்லையில் நடந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக ராஜேஷ் அறிவித்துள்ளார். ‘ஒரு போர் வீரனின் மரணத்திற்கு எவ்வளவு பணமும் ஈடாகாது. பழனியின் தியாகத்திற்காக அவர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’ என்று அவர் கூறியிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இயக்குனர் மஜீத்துக்கு கோட்டப்பாடி ராஜேஷ் நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajesh ,Rs ,
× RELATED சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா...