சீக்கியர்கள் பற்றி அவதூறு அனுஷ்கா சர்மாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இப்போது படத் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார். அவர் தயாரித்துள்ள வெப் சீரிஸ் பேட்டல் லாக். அவினாஷ் அருண், புரோஹித்ராய் இயக்கி உள்ளனர். இது அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பற்றிய க்ரைம் த்ரில்லர் கதை. கடந்த மாதம் 15ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இந்த தொடருக்கு தடைகேட்டு சீக்கிய அமைப்பு ஒன்று சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்த தொடர் சீக்கிய சமூகத்து இளைஞர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாகவும், அதனால் தொடரை தடை செய்வதோடு, தயாரிப்பாளர், வெளியீட்டாளர், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா, ஓடிடி வெளியீட்டு நிறுவனம், படத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Stories:

>