×

ஊர் பெயர் ஆங்கிலத்தில் மாற்றம் இயக்குனர் கார்த்திக் நரேன் கிண்டல்

ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்ததற்கு இயக்குனர் கார்த்திக் நரேன் கிண்டல் அடித்துள்ளார். ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் துருவங்கள் பதினாறு, மாபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், இது பற்றி டிவிட்டரில் கூறும்போது, அடப்பாவிகளா என கமென்ட் அடித்துள்ளார். அத்துடன் தான் இயக்கி வெளிவராமல் உள்ள நரகாசூரன் படத்தின் தலைப்பை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்யலாமா? அப்படி செய்தால் படம் திரைக்கு வந்துவிடுமா? என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.

Tags : Change of Name ,English ,
× RELATED பதவியை ராஜினாமா செய்தால் அது தவறான...