×

ஐதராபாத்தில் ஷூட்டிங்கிற்கு அனுமதி படப்பிடிப்புக்கு முன் டெஸ்ட் ஷூட் நடத்திய ராஜமவுலி

கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகளுக்கு தெலங்கானா அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் பல்வேறு தெலுங்கு படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது, குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பை நடத்தினால் போதிய பாதுகாப்பு இருக்குமா, எத்தனை பேர் வரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம். சமூக விலகலை எப்படி கையாள்வது என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள, டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தி ராஜமவுலி திட்டமிட்டார். அதன்படி அவரது உதவியாளர்கள், இந்த டெஸ்ட் ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். அதை பார்த்துவிட்டு, திருப்தி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பை நடத்துவது என ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். 

Tags : Rajamouli ,test shoot ,Hyderabad ,shooting ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்