தமன்னாவின் 4 தோழி நடிகைகள்

உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த பெண் அம்மா என்று குறிப்பிடுகிறார் தமன்னா. ‘அம்மா என்பவர் தன்னலமற்றவர். தனது விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, நமக்காக மட்டுமே சிந்தித்து செயல்படக்கூடியவர். என் வாழ்க்கையில் அம்மாவுக்கு அடுத்ததுதான் மற்றவர்கள். சக ஹீரோயின்களில் ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், திரிஷா, நயன்தாரா போன்றோர் நெருங்கிய தோழிகள். ஆனால், அவர்களுடன் சினிமா சம்பந்தமாக பேசுவது குறைவு. எங்கள் எதிர்காலம் குறித்து நிறைய விஷயங்கள் பேசுவோம். அது ரொம்ப, ரொம்ப பெர்சனல். இங்கே குறிப்பிட முடியாது’ என்ற தமன்னா, அம்மா உதவியுடன் சிந்தி மொழி பேச கற்று வருகிறார். சாப்பிடுவதில் கட்டுப்பாடு எதுவும் விதித்துக்கொள்ளாத தமன்னா, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்துவிடுகிறார். வேக வைத்த காய்கறிகள் அதிகம் சாப்பிடுகிறாராம். அதிகம் சாப்பிட்டாலும் அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறேன் என்கிறார்.

Related Stories:

>