×

ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்த அமலா பால்

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது அமலா பாலுக்கு வாடிக்கை. சில மாதங்களுக்கு முன் டிஷர்ட், வேட்டி அணிந்துகொண்டு கேரள காட்டுப் பகுதியில் கையில் மதுபாட்டிலுடன் அவர் போட்டோவுக்கு போஸ் தந்தார். கள்ளு குடிப்பதன் ருசியே வேறு என அவர் கமென்ட்டும் போட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட இந்த படமும் மெசேஜும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சிகரெட் புகைப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டு, அப்போதும் பரபரப்பை ஏற்படுத்தினார். பஞ்சாபை சேர்ந்த தனது காதலர் பவ்னிந்தர் சிங் உடன் திருமணம் செய்துகொள்ளும் புகைப்படங்கள் ஓரிரு மாதங்களுக்கு முன் வைரலானது. தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என அவர் மறுத்தார். இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடியதாக அந்த நபருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால். அந்த நண்பரின் மொட்டை தலையில் அமலா பால், முத்தம் தரும் காட்சியும் அந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. இது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Amala Paul ,
× RELATED எனது இன்னொரு முகம் ஆடுஜீவிதம் பிருத்விராஜ் நெகிழ்ச்சி