×

அமெரிக்காவின் நிலை கவலை அளிக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில், நேற்று இருவரும் இணையதளம் மூலம் கலந்துரையாடினர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: பயணங்கள்தான் வாழ்க்கையை புரிந்துகொள்ள வைக்கிறது. பயணங்களில் நிறைய மனிதர்களை சந்திக்கிறேன். லண்டன் மசூதி முன்பும், அமெரிக்க விமான நிலையத்திலும் உலகிலுள்ள மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அதுதான் என்னை எழுத தூண்டியது. படம் இயக்க தூண்டியது. மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் இசையும் உருவாகிறது.

அமெரிக்காவின் இன்றைய நிலை கவலை அளிப்பதாகவும், பாவமாகவும் இருக்கிறது. இப்போது அங்கே புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடு  இந்த நிலையில்  இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் இந்திய மக்கள் வட இந்தியன், தென்னிந்தியன், தமிழன், தமிழன் அல்லாதவன் என்ற வேறுபாடு பார்க்காமல், சமூக நலனை மட்டுமே பார்க்க வேண்டும். வெளிநாடு செல்லும்போது தலைகுனிந்து நிற்காமல், சுய மரியாதையுடன் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே என் ஆசை.

Tags : United States ,A.R. ,Rahman ,
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து